வீரத்தமிழா எழுந்திடுவாய்
வெற்றிச் சங்கம் முழக்கிடுவாய்
சோர்வு போக்கித் துள்ளியும்நீ
சுவர்க்க வாழ்வு கொணர்ந்திடுவாய்.
பாரதி கண்ட கனவெல்லாம்
பாரினில் இன்று பலித்திட
வீரா உந்தன் உழைப்பால்
வேண்டிய சாத்திரஞ்
செய்திடுவாய்.
கமழும் நல்ல காவியங்கள்
காட்சி நிறை பேர் ஓவியங்கள்
குழியிற் புதையா வகைகண்டு
குவலயம் போற்ற வந்திடுவாய்.
பெண்ணைப் போற்றி வளர்த்திடுவாய்
பெரிய கல்வி அளித்திடுவாய்
மண்ணை செழிக்க வைத்திடுவாய்
மகிழ்வை யெங்கும்
விளைத்திடுவாய்.
நாட்டது விடுதலை நாட்டிடுவாய்
நன்மொழி தன்னை போற்றிடுவாய்
பாட்டோடு தாளம் கூடிட
பற்பல ஆட்டம் பயின்றிடுவாய்.
தமிழ்த்திரு நாடுன் தாயேகாண்
தாழ்வோடு
தினமும் பணிவாய்!!!
கமழ்தரு மலர்கள் பாதம் சூடி
கணமும் அவளைத் துதித்திடுவாய்.
உனது பணிகள்
பலவுண்டு
ஊக்கம் பொங்க உழைத்திடுவாய்
தனது நலத்தை பாராமல்
பரணி போற்ற வாழ்ந்திடுவாய்.
வீரம் பொங்க விளங்கிடுவாய்
வெற்றி எங்கும்
விளைத்திடுவாய்
தூரம் குறுகக் கண்டிடுவாய்
துரிதமுறும்
உன் உழைப்பால்.
இன்றே தொடங்கி உழைப்பாயடா
ஏறு போல்நீ
நடப்பாயடா
நன்றே கூடி நாமெல்லாம்
நாளும் உன்னை
துதிப்பமடா!!
வீரத் தமிழா
எழுந்திடுவாய்
வெற்றிச்
சங்கம் முழங்கிடுவாய்
சோர்வு போக்கித் துள்ளியும்
சுவர்க்க
வாழ்வு கொணர்ந்திடுவாய்
நன்றி பகிர்ந்துள்ளேன்.
ReplyDelete