பெற்றோர் வணக்கம்
அன்னையே! தந்தையே! நமஸ்காரம்
அனுதினம் அன்பாய்
வளர்த்திடுவீர்
முன்னறி தெய்வம் நீரன்றோ
முன்நின் றெம்மை காத்திடுவீர்.
சொன்ன சொற்கள் கேட்டிடுவோம்
துதிசெய்து உம்மைப் போற்றிடுவோம்
கன்னஞ் சிவக்கத் தினமும்நீர்
கணக்கில் முத்தம் ஈய்ந்திடுவீர்.
இனிய பண்டம் அளித்திடுவீர்
இன்பம் பொங்க வளர்த்திடுவீர்
மனையும் விளங்க நாங்களுமே
மங்கா விளக்கென ஒளிர்ந்திடுவோம்.
சுற்றி நாங்கள் ஆடிடுவோம்
சூழ்ந்து உம்மைப்
பாடிடுவோம்
கற்ற பாடம் ஓதிடவே
கனிந்து நீரும் கேட்டிடுவீர்.


